2020ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இயற்பியல் துறைக்கான விருதை இன்று (6 October 2020) அறிவித்தது.

இயற்பியலுக்கான 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு  பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பிரிவு : இயற்பியல்
பெறுபவர்கள்: மூவர்

1. ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) (பிரிட்டன்)
2. ரெயின்ஹார்ட் கென்சல் (Reinhard Genzel) (ஜெர்மனி) மற்றும்
3. ஆன்ட்ரியா எம்.கேஷ் (Andrea M. Ghez) (அமெரிக்கா)

காரணம் :

1. கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக - ரோஜர் பென்ரோஸ்க்கு.

2. விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக- ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கு

கருத்துரையிடுக

0 கருத்துகள்