- வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
- மன்னர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.
- மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.
- இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
- ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
- சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டி நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.
சேரநாடு
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
அணி : தற்குறிப்பேற்ற அணி
சொல்லும் பொருளும்:
அள்ளல் - சேறு
பழனம் - நீர் மிக்க வயல்
வெரீஇ - அஞ்சி
பார்ப்பு - குஞ்சு.
சோழநாடு
காவல் உழவர் களத்துஅகத்துப் போர் ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.
அணி : உவமை அணி
பாண்டியநாடு
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித்
திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு.
அணி : உவமை அணி
சொல்லும் பொருளும்:
நந்து - சங்கு
கமுகு - பாக்கு
முத்தம் - முத்து
இலக்கணக் குறிப்பு:
பெயரெச்சம் : அஞ்சி
பண்புத்தொகைகள் :
வெண்குடை, இளங்கமுகு
வினைத்தொகைகள்:
கொல்யானை, குவிமொட்டு-
பகுபத உறுப்பிலக்கணம் :
கொண்ட - கொள்(ண்) + ட் + அ
கொள் - பகுதி(ண் ஆனது விகாரம்)
ட் - இறந்த கால இடை நிலை ;
அ - பெயரெச்ச விகுதி
0 கருத்துகள்