இரட்டைமலை சீனிவாசன்


இரட்டைமலைசீனிவாசன் (1859-1945) 1859ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். சாதிப்படிநிலைகளில் ஒடுக்கப்பட்டமக்களின் சமூகநீதி, சமத்துவம், சமூகஉரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார். 

அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர்(1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார். அவரது சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முதன்முதலாக எழுதப் பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.

தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல் ஆதிதிராவிட மகாஜனசபை எனும் அமைப்பை உருவாக்கினார். ஒடுக்கப்பட்டமக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றினார்.
B.R. அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் (1930 மற்றும் 1931) நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்பு நிலைமக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

1932இல் செய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்.

read more...

கருத்துரையிடுக

0 கருத்துகள்