ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களும், அறிகுறிகளும்:

ஊட்டச்சத்துக்களின் வகைகள்:
கார்போஹைட்ரேட்டுகள் - ஆற்றல் அளிக்கின்றன
புரதங்கள் (புரோட்டீன்ஸ்) - வளர்ச்சி அளிக்கின்றன
கொழுப்புகள் - ஆற்றல் அளிக்கின்றன.

வைட்டமின்கள் - உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
தாது உப்புகள் - உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.
நீர் - உணவைக் கடத்துகிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களும், அறிகுறிகளும்:
உணவுப் பொருட்கள் - மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள்.
குறைபாட்டு நோய்: குவாஷியோர்கர் (1 -5 வயதுக் குழந்தைகள்)- அறிகுறிகள் : வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு. கை மற்றும் கால்களில் வீக்கம்.

ஊட்டச்சத்து: புரதம் - உணவுப் பொருட்கள் : மீன் இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள். 
குறைபாட்டு நோய் : மராஸ்மஸ் - அறிகுறிகள் : குச்சி போன்ற கை, கால்கள். மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்.

வைட்டமின் குறைபாடு :
வைட்டமின் ஏ - உணவுப்பொருள்கள்: மீன் எண்ணெய், முட்டை, பால், நெய், வெண்ணெய், கேரட், மக்காச்சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள்.

குறைபாட்டு நோய்: மாலைக்கண் நோய் - அறிகுறிகள் : பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை.

வைட்டமின் பி - உணவுப் பொருட்கள் : முழு தானியங்கள், பருப்பு, தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சை காய்கறிகள். குறைபாட்டு நோய்: பெரி - பெரி - அறிகுறிகள் : ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு
வைட்டமின் சி - உணவுப் பொருள்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சைமிளகாய், தக்காளி.  குறைபாட்டு நோய்: ஸ்கர்வி - அறிகுறிகள் - பல் ஈறுகளில் ரத்தம் வடிதல்
வைட்டமின் டி - உணவுப் பொருள்கள் : மீன் எண்ணெய், பால், முட்டை மற்றும் சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது. குறைபாட்டு நோய்: ரிக்கட்ஸ் - அறிகுறிகள் - வலிமையற்ற, வளைந்த எலும்பு.
வைட்டமின் இ - உணவுப் பொருள்கள் : தாவர எண்ணெய், பச்சைக் காய்கறிகள், முழு கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரை.
குறைபாட்டு நோய் : மலட்டுத் தன்மை- அறிகுறிகள் : குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல்.
வைட்டமின் கே - உணவுப் பொருள்கள் : பச்சைக் காய்கறிகள், தக்காளி, முட்டைக்கோஸ், முட்டை, பால் பொருள்கள். நோய்: ரத்தம் உறையாமை - நோய் அறிகுறிகள் : சிறிய காயம் ஏற்படும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் .

கால்சியம் - உணவுப்பொருள்கள்: பால், மீன், பச்சைப் பயறு, கோதுமை. நோய்: எலும்பு மற்றும் பல் சிதைவு - அறிகுறிகள்: எலும்பு, பற்களின் வலிமை குறைதல்.

இரும்பு - உணவுப் பொருள்கள் : இறைச்சி, ஆப்பிள், கீரை, பேரீச்சம் பழம். நோய் : ரத்த சோகை - நோய் அறிகுறிகள்: மயக்கம் வருதல், உடல் சோர்வு.

அயோடின் - உணவுப் பொருள்கள் : பால், அயோடின் கலந்த உப்பு, இறால், நண்டு. நோய்: முன் கழுத்துக் கழலை - அறிகுறிகள் : கழுத்துப் பகுதியில் வீக்கம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்