உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணக்கவி
  • இயற்பெயர் : நாராயணசாமி
  • பெற்றோர் : கிருஷ்ணசாமி-முத்தம்மாள்
  • பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
  • காலம் : 25.9.1899 - 23.5.1981
  • சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
  • புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் 15 அண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் திரை உலகிற்கு வந்தவர்
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  • திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
  • திரைப்படப் பாடல்களை வருணனையை விட்டுக் கருத்தை நோக்கி நகர்த்தியவர்
  • உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து “நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
  • நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் இவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
  • பாடல்கள்
  • “போகாதே போகாதே என்கணவா
  • பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்’’
  • “பெண்களை நம்பாதே கண்களே
  • பெண்களை நம்பாதே’’
  • “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படித்தாலும் இந்தத் தமிழ்நாட்டிலே’’
  • “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’
  • “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது’
  • “பட்டணந்தான் போகலாமடி - பொம்பளே பணங்காசு தேடலாமடி’’
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்