நற்றிணை | TNPSC, PGTRB Exams Study Material

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
-     எட்டுத்தொகையுள் அக நூல்கள் ஐந்து
    அவை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
-    அகநூல்
-     400 பாடல்களைக் கொண்டது
-     பாடிய புலவர்களின் எண்ணிக்கை 175
-     சிற்றெல்லை 9 அடி, பேரெல்லை 12 அடி

-    நல் என்ற அடைமொழி பெற்றது.
-    நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
-    எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நூல்
-    தொகுத்தவர் பெயர் தெரியவில்லை
-    தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
-    கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
-    நற்றிணைக் கடவுள் வாழ்த்துத் திருமாலைப் பற்றியது

-    பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். எனவே நற்றிணையை தூதின் வழிகாட்டி என்பர்.
-    அறிவுடைநம்பி, உக்கிரப் பெருவழுதி, பாலைபாடிய பெருங்கடுங்கோன் போன்ற அரசர்களும் நற்றிணைப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
-    முதன்முதலில் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தான் இயற்றிய புத்துரையுடன் 1914 இல், பதிப்பித்து வெளியிட்டார்.
-    ஒளவை சு.துரைசாமிபிள்ளையால் பின்னர் விளக்கவுரை எழுதப்பட்டது.
செய்திகள்
-    நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம்.
-    தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவை சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும்,    காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
-    அக்கால மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.
-    விடிவெள்ளி, எரிநட்சத்திரம் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
-    மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறன், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.

நற்றிணையின் இடம் பெற்றுள்ள சில முக்கிய பாடல்வரிகள் :
’’நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி’’ - கபிலர்

’’நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டினோர் திறத்தே’’ - கபிலர்

’’முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்’’
                - பெயர்தெரியவில்லை

“ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா உண்ணி’’
                - மதுரை மருதன் இளநாகனார்

“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு’’
                    - கருவூர்கோசனார்

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.
                - மிளைகிழான் நல்வேட்டனார்.

“நும்மினும் சிறந்தன்று, நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே’’
                - பெயர்தெரியவில்லை

“இளமையிற் சிறந்த வளமையும் இல்லை’’
                    - பெயர்தெரியவில்லை

“சாதல்  அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’’
                    - பெயர் இல்லை

“கொண்ட கொழுநன் குடிவரன் உள்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உண்ணாள்’’
                    - போதனார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்