பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம். 

இவரது ஊர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம். 

இவர்தம் பெற்றோர் துரைசாமி, குஞ்சம்மாள் ஆவர்.

10.03.1933அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.

கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். 

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள்மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுபட்டார்.

இவரது பள்ளிப்பறவைகள் என்னும் குழந்தைப்பாடல் தொகுப்பு நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என முப்பிரிவாக அமைந்துள்ளது.

இவர் பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர்  ஆவார்

சிறப்பு பெயர்:

செந்தமிழ்ச் செல்வர்- தமிழக அரசு
செந்தமிழ் ஞாயிறு-பறம்புமலை பாரி விழாவினர்
மொழி ஞாயிறு-தென்மொழி இதழ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்