சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்
என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். 

இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.

சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம்,
ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை.

‘மணிக்கொடி’ இதழில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் ஒன்று 'மனித யந்திரம் '

'ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்