10th Tamil Text Book - Silapathigaram
TNPSC, TET Exams Notes Pdf Download
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்”
பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் திருவரங்கம் மற்றும் உறையூர் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர்.
தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்; இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம்.
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன .
அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம்.
கோவலனனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார் .
மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்)
உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை.
இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.
வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.
இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
I. சொல்லும் பொருளும்
சுண்ணம் – நறுமணப்பொடி,
காருகர் – நெய்பவர் (சாலியர்),
தூசு – பட்டு
துகிர் – பவளம்
வெறுக்கை – செல்வம்
நொடை – விலை
பாசவர் – வெற்றிலை விற்போர்
ஓசுநர் – எண்ணெய் விற்போர்
மண்ணுள் வினைஞர் – ஓவியர்
மண்ணீட்டாளர் – சிற்பி
கிழி – துணி
II. இலக்கணக் குறிப்பு
வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
மயங்கு – பகுதி
இ(ன்) – இறந்த கால இடைநிலை
‘ன்’ – புணர்ந்து கெட்டது.
ய் – உடம்படு மெய்
அ – பெயரெச்ச விகுதி
IV. சிறு வினா
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
உமணர் – உப்பு விற்பவர்
III. குறு வினா
“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”
அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் – பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – சுட்டு
ஈ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர் (நெசவாளர்)
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனமும் அகிலும்
கருத்துகள்
கருத்துரையிடுக