10th Tamil கேட்கிறதா என் குரல்! - முக்கிய தேர்வுக்குறிப்புகள்

இயற்கை - உரைநடை உலகம்

கேட்கிறதா என் குரல்!

10th Tamil கேட்கிறதா என் குரல்! - காற்று பற்றிய 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்


  • உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார் தொல்காப்பியர் அவற்றுள் ஒன்று காற்று. 
  • திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார். 
  • ஔவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,
    வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
    ஆயுள் பெருக்கம்உண் டாம்
                                    - ஔவை குறள், 49
    என்று காற்றைச் சிறப்பித்துள்ளார்.
காற்றின் பல பெயர்கள்:
  • காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.

  • நான்கு திசையிலும் வீசுகின்ற திசையைக் கொண்டும் தமிழர்கள் காற்றுப் பெயர் சூட்டியுள்ளனர்.

  • கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. 
  • கிழக்கிலிருந்து வீசும்போது கொண்டல் எனப்படுகிறது.
  • கொண்டல் குளிர்ச்சி தருகிறது; இன்பத்தைத் தருகிறது; மழையைத் தருகிறது; கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறது.

  • மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. 
  • மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை என அழைக்கப்படுகிறது.
  • மேற்கிலிருந்து அதிக வலிமையோடும், வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறது.

  • வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. 
  • வடக்கிலிருந்து வீசும்போது வாடைக்காற்று எனப்படுகிறது. 
  • பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
  • தெற்கிலிருந்து வீசும்போது தென்றல் காற்று எனப்படுகிறது. 
  • மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொண்டள்ளது.
  • இலக்கியத்தில் தென்றல் காற்று, பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் தென்றல் காற்றை,
    ''வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"
                                       - சிலம்பதிகாரம்  2:24

    என நயம்பட உரைக்கிறார்.
    • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
      "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
      செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" எனத் தூது செல்ல தென்றல் காற்றை அன்போடு அழைக்கிறாள். 
    முந்நீர் நாவாய் ஓட்டியாக 
    • "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
      வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
      களிஇயல் யானைக் கரிகால் வளவ!"
                                                   - புறநானூறு. 66
    எனக் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் 'வளி' எனக் குறிப்பிட்டு காற்றைச் சிறப்புச் செய்துள்ளார்.

    ஹிப்பாலஸ் பருவக்காற்று

    கி.பி. (பொ.ஆ.) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

    கிரேக்க அறிஞர் "ஹிப்பாலஸ்" (Hippalus) என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு. அதற்கும் முன்னரே என் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

    காற்றின் சிறப்பு
    • வளி மிகின் வலி இல்லை (புறம். 51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். 
    • மதுரை இளநாகனார் (புறம். 55) கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
    காற்றாலை மின் உற்பத்தி
    • உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம்பெற்றுள்ளது.
    • இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
    காற்று மாசு
    • உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்பெற்றுள்ளது.
    • இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது காற்று மாசு ஆகும்.
    • காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
    மரம் தரும் வரம் நான்
    • ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் மனிதர் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு அவர்களின் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும் மரங்களை வளருங்கள். 
    • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடப்படுகிறது.
    குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
    Click & Download Jana Tamil Pdf

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்