நிகழ்கலை | தோற்பாவைக் கூத்து

10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான  
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 


தோற்பாவைக் கூத்து

  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது. 
  • இதில் இசை, ஓவியம். நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன. 
  • கூத்து நிகழ்த்தும் திரைச்சிலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம்முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. 
  • ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. 
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
எத்திசையும் புகழ் மணக்க.....
    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
      - ஐந்தாம் உகைத்தமிழ் மாநாட்டுமலர்

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்