உவமை, உருவகம் – வேறுபடுத்துக.
உவமை : சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்.
உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும்.
எ – கா : மதிமுகம் (மதி போன்ற முகம்)
உருவகம் : ஒப்பீட்டுச் செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம். உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமையும்.
எ – கா : முகமதி (முகமாகியமதி)
உவமை என்பது யாது? உவமையை ஏன் பயன்படுத்தினர்?
ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும்.
ஒரு கருத்தைக் கூறுகையில், கேட்போர் மனத்தைக் கவரும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் கூறுவதற்கு உவமையைப் பயன்படுத்தினர்.
உவமை, எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக.
Answer:
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
எ-கா : புலிபோல – தொழில்உவமை, மழைபோல – பயன்உவமை, துடி போன்ற – வடிவுஉவமை, தளிர் போல – நிறஉவமை.
Question 4.
உவமையில் அமையும் உறுப்புகள் யாவை? சான்று தருக.
Answer:
உவமானம் (உவமை), உவமேயம் (பொருள்), உவமை உருபு, பொதுத்தன்மை என்னும் நான்கு உறுப்புகள் உவமையில் அமையும்.
சான்று : செல்வன் புலி போலப் பாய்ந்தான்.
உவமானம் (உவமை) – புலி; உவமேயம் (பொருள்) – செல்வன்; உவமை உருபு-போல; பொதுத்தன்மை – பாய்தல்.
Question 5.
உருவகமாவது யாது? சான்று தருக.
Answer:
உவமானத்தையும் (உவமையையும்), உவமேயத்தையும் (பொருளையும்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே என்பதுபோலக் கூறுவது உருவகமாகும்.
எ – கா : முகமதி, பாதமலர்.
(உருவகத்தில் பொருள் (உவமேயம்) முன்னும், உவமை (உவமானம்) பின்னும் அமையும்.)
உருவகம் எவ்வெவற்றின் அடிப்படையில் அமையும்? சான்று தருக.
உருவகம், வினை, பயன், வடிவம், உரு என்பவற்றின் அடிப்படையில் அமையும்.
எ – கா : எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி – வினை உருவகம்.
ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ (சூரியன்) – பயன் உருவகம்.
நிலவயலின் நட்சத்திர மணிகள் (வானம் விண்மீன்கள்) – வடிவ உருவகம்.
மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் (அருவி) – நிற உருவகம்.
உள்ளுறை உவமம் என்பது யாது?
கவிஞர் தாம் கூறக் கருதிய, அகமாந்தர்களின் மன உணர்வுகளை வெளிப்படையாகக் கூறாமல், கருப் பொருள்கள்மூலம் உவமைப்படுத்துவது, உள்ளுறை உவமம் ஆகும்.
உள்ளுறை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
வினை, பயன் போன்றவற்றின் அடிப்படைகளில் தோன்றும் குறியீடுகளைக் கொண்டு, உள்ளுறை உருவாக்கப் படுகிறது.
உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
உள்ளுறை :
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வு களை, இயற்கைப் புனைந்துரைமூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது ‘உள்ளுறை ஆகும்.
பாடலில் இடம்பெறும் மாந்தரின் உள்ளத்தில் எழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமையும்.
அகநானூற்றில் தோழிக்குச் சொல்வதுபோல் மறைந்துநிற்கும் தலைவனுக்குத் தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், ‘உள்ளுறை’ உணர்த்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இறைச்சி :
அகப்பாடலில் இடம்பெறும் உள்ளுறை போன்ற மற்றொரு உத்தி, இறைச்சி. ‘இறைச்சி ‘ என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்புப் பொருளாகும்.
இது அகப்பாடலில் மட்டுமே இடம்பெறும். தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, தலைவன் செல்லும் வழியில் ஆண்யானை, பெண்யானையின் பசியைப் போக்க, ‘யா’ மரத்தில் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்.
இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்டான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்’ என்பது, இது உணர்த்தும் குறியும் பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது, இறைச்சி’ ஆகும்.
0 கருத்துகள்