சிற்றகல் ஒளி (தன்வரலாறு) - ம.பொ.சிவஞானம்

பத்தாம் வகுப்பு - தமிழ் உரைநடை இயல் 7
சிற்றகல் ஒளி (தன்வரலாறு) - ம.பொ.சி.

  • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.  
  • தமிழ்நாட்டில் 1906ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  • இத்தகைய சிறப்புள்ள 1906ஆம் ஆண்டில் ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன்குப்பம் என்னும் பகுதியில் ம.பொ.சி. பிறந்தார்.
  • தந்தையார் பெயர் பொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. 
  • பெற்றோர் எனக்கு இட்ட பெயர் ஞானப்பிரகாசம். ஆனால் சரபையர் என்ற முதியவர் ஒருவர் இவரின் பெயரை மாற்றி 'சிவஞானி' என்றே அழைத்தார். அப்பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.
  • "ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று கல்வி; மற்றொன்று கேள்வி. யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமையிலே திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு"
  • "நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, எனக்கு விருப்பமான புத்தகங்களை, மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறேன். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவேன்" 
  • "என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்துவைத்துள்ள சொத்துகள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று உறுதியாகக் கூறுவேன்"
  • பேராயக் கட்சியால் (காங்கிரஸ் கட்சி) நடத்தப்பட்ட ஊர்வலங்களிலும் கதர் விற்பனையிலும் தவறாமல் கலந்துகொள்வார் ம.பொ.சி.
  • 30.09.1932இல் 'தமிழா! துள்ளி எழு' என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, ம.பொ.சி. சிறையிலிடப்பட்டார்.
  • 1942 ஆகஸ்டு 8ஆம் நாள், 'இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றியது.
  • நாடெங்கும் தலைவர்கள் கைதான நிலையில் ம.பொ.சி. ஆகஸ்டு 13ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் உட்பட, தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு ம.பொ.சி. கண்டார். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து அமராவதிச் சிறைக்கு மாற்றினர். 

 
1. ‘’மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’’ - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
(A) திருப்பதியும் திருத்தணியும்
(B) திருத்தணியும் திருப்பதியும்
(C) திருப்பதியும் திருச்செந்தூரும்
(D) திருப்பரங்குன்றமும் பழனியும்
See Answer:

2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ___________
(A) திருக்குறள்
(B) புறநானூறு
(C) கம்பராமாயணம்
(D) சிலப்பதிகாரம்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்