திரிகடும் - பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்
- திரி என்றால் மூன்று; அவை சுக்கு, மிளகு, திப்பிலி. கடும் என்றால் காரம் உள்ளது என்று பொருள்.
- ஆசிரியர் நல்லாதனார்
- வைணவர்
- 100 பாடல்கள் உள்ளன
- ஒவ்வொரு பாடலும் மூன்றாம் அடியில் ‘இம் மூன்றும்’ (அல்லது) ‘இம் மூவர்’ என வருகிறது
மேற்கோள்
“நெஞ்சம் அடங்குதல் வீடாகும்”
“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்”
“தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்”
“நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்”
“நட்பின் கொழுமுனை பொய் வழங்கின் இல்லாகும்”
“கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி”
நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும்
இல்லறம் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்
0 கருத்துகள்