தேசிய அறிவியல் நாள்
- ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தேசிய அறிவியல் தினம் முதல் முறையாக பிப்ரவரி 28, 1987 அன்று அனுசரிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம்
- தேசிய அறிவியல் தினத்தின் முதன்மை நோக்கம் அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும்
- 2024-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
சர்.சி.வி.ராமன்
- பிப்ரவரி 28, 1928 இல், இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் தனது 'ராமன் விளைவு கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார்
- இக்கண்டுபிடிப்பிற்க்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒளிசிதறல் அல்லது ராமன் விளைவு என அழைக்கப்படுகிறது
- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன் ஆவார்
- சர்.சி.வி.ராமன் அவர்களுக்கு இந்திய அரசானது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை 1954 ஆம் ஆண்டு வழங்கி கௌரவப்படுத்தியது.
2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் :
- உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்
0 கருத்துகள்