முடியரசன் TNPSC

 

புலவர்    :    முடியரசன்

இயற்பெயர்    :    துரைராசு

பெற்றோர் : சுப்பராயலு – சீதாலெட்சுமி

காலம்    :    1920 – 1998

நூல்கள்    :    பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்

ஆசிரியர் குறிப்பு

  • முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
  • இவரின் பெற்றோர் சுப்பராயலு – சீதாலெட்சுமி
  • இவர் தமிழாசிரியராக காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார்.
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது
  • இவரது காலம் 1920 – 1998
  • “திராவிட நாட்டின் வானம்பாடி” என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்றவர்.
  • ‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ என்று தந்தை பெரியாரால் பாராட்பட்டார்
  • இவர் பாதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.
  • பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர்.
  • தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
  • இவர் இயற்றிய நூல்கள் பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
  • பூங்கொடி என்னும் காவியத்துத்க்காக 1966-இல் தமிழக அரசு பரிசு வழங்கியது.
  • சாதி மறுப்பு திருணம் செய்தார்
  • இவரது கவிதைகளை சாகித்ய அகாடமி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளது.
  • ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
    அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற
    தீங்குடை மனப்போக்கர் வாகும் நாட்டில்
    தென்படுமோ மொழியுணர்ச்சி?

    இவ்வரிகள் முடியரசனின் தணியாத தண்டமிழ்க் காதலை வலியுறுத்தும்.


    கருத்துரையிடுக

    0 கருத்துகள்