சுரதா TNPSC Tamil Notes

உவமைக் கவிஞர் சுரதா

வாழ்க்கைக்குறிப்பு

  • இயற்பெயர் : இராசகோபாலன்
  • ஊர் : தஞ்சை மாவட்டம் பழையனூர்
  • பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
  • பிறந்த நாள் : 23.11.1921
  • உடன் பிறந்தவர் : வேதவல்லி (அக்கா)
  • மனைவி : சுலோச்சனா
  • மகன் : கவிஞர் கல்லாடன்
  • இலக்கணம் கற்றது : சீர்காழி அருணாசல தேசிகர்


சிறப்பு பெயர்கள்

  • உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)

நூல்கள்

  • தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  • சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)
  • சிக்கனம்
  • சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  • அமுதும் தேனும், 1983
  • பாரதிதாசன் பரம்பரை
  • வினாக்களும் சுரதாவின் விடைகளும்
  • நெய்தல் நீர்
  • உதட்டில் உதடு
  • எச்சில் இரவு
  • எப்போதும் இருப்பவர்கள்
  • கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  • சாவின் முத்தம் (முதல் நூல்)
  • சிறந்த சொற்பொழிவுகள்
  • சுரதாவின் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
  • சொன்னார்கள்
  • தமிழ்ச் சொல்லாக்கம்
  • தொடாத வாலிபம்
  • நெஞ்சில் நிறுத்துங்கள்
  • பட்டத்தரசி
  • பாவேந்தரின் காளமேகம்
  • புகழ்மாலை
  • மங்கையர்க்கரசி
  • முன்னும் பின்னும்
  • வார்த்தை வாசல்
  • வெட்ட வெளிச்சம்
  • துறைமுகம்
  • கட்டுரை
  • முன்னும் பின்னும்

இதழ்கள்

  • காவியம் (முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம் (மாத இதழ்)
  • ஊர்வலம் (மாத இதழ்)
  • சுரதா (மாத இதழ்)
  • விண்மீன் (மாத இதழ்)


பாரதிதாசன் உடன் தொடர்பு:

  • 1941ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கி இருந்து அவரின் கவிதைப் பணிக்குத் துணை நின்றார்.
  • பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல்.
  • அச்சு பணிகளைை கவனித்தல்.
  • பாவேந்தர் நூல் வெளியீட்டிற்கு துணை நிற்றல்.
    எனப் பல நிலைகளில் பாவேந்தர் பாரதிதாசன் உடன் சுரதா தொடர்பு வைத்துள்ளார்.

கவிதை இயற்றுவதில் சுரதாவின் பங்கு:

கவிஞர் சுரதாவின் சொல்லடா எனும் தலைப்பில் அமைந்த கவிதையை புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி எனும் இதழ் 1947ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரை பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தர் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமை கவிஞர் சுரதாவை சாரும்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை இருந்தபோது அவரின் உதவியாளராக இருந்தார்.

திரைப்படத்துறையில் கவிஞர் சுரதாவின் பங்கு:

சுரதாவின் கலை உணர்வை தெரிந்துகொண்ட கு.ச. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரை திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக உரையாடல் எழுதினார்.

கவிஞர் சுரதா மிகக் குறைவான பாடல்களை எழுதியுள்ளார்.

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சுரதா அவைகள் பின்வருமாறு

“அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே”
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா”

மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப் பணியில் சுரதாவின் பங்கு:

  • கவிஞர் சுரதாவின் முதல் நூல் “சாவின் முத்தம்” 1946 ஆம் ஆண்டு வெளியியிடப்பட்டது.
  • 1956 இல் பட்டத்தரசி என்ற சிறுகாவிய நூலை வெளியிட்டார்.
  • 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி என்ற இதழில் தொடர்ந்து கவிதைகளைை எழுதி வந்தார்.


அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சிதிரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்