இனியவை நாற்பது

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.

சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
- பூதந்சேந்தனார்
சொற்பொருள்:
குழவி – குழந்தை
பிணி – நோய்
மாறி – மயக்கம்
கழரும் – பேசும்
சலவர் – வஞ்சகர்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
ஊர் = மதுரை
காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கருதும் வழக்கத்தை முதன் முதலாகக் கூறிய நூல் இனியவை நாற்பது

மேற்கோள்
 “ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே”
 “ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது”
 “வருவாய் அறிந்து வழங்கல் இனிது”
 “தடமென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடமென்று உணர்தல் இனிது”

கருத்துரையிடுக

0 கருத்துகள்