பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்

பதினெண்கீழ்க்கணக்கு |
சங்க மருவிய கால இலக்கியத் தகவல்கள்

  • சங்க மருவிய கால இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள், அறநூல்கள் என்பன எல்லாம் ஒன்றே.
  • சங்க மருவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை.
  • சங்க மருவிய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.
  • இதற்கு ‘இருண்ட கால இலக்கியம்’ என்ற பெயரும் உண்டு.
  • புறச் சமயங்களான சமணமும் பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.
  • பதினெண் -18, கீழ் - சிறிய, கணக்கு - நூல், இலக்கியம்.
  • இப்பதினெட்டு நூல்களையும் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றி ஏதும் தெரியவில்லை.
  • பதினெண்கீழக் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெயர்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • கார் நாற்பது
  • களவழி நாற்பது
  • ஐந்திணை ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமொழி ஐம்பது
  • திணைமாலை நூற்றைம்பது
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • ஆசாரக்கோவை
  • பழமொழி
  • சிறுபஞ்சமூலம்
  • முதுமொழிக்காஞ்சி
  • ஏலாதி
  • கைந்நிலை
  •     பகுதி – (ஆ) இலக்கியம்

    அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள். 

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்