ஐந்திணை ஐம்பது

  • ஆசிரியர் மாறன் பொறையனார்
  • 4 ஆம் நூற்றாண்டு
  • அகநூல்
  • திணைக்குப் 10 பாடலாக மொத்தம் 50 பாடல்கள் உள்ளன.
  • முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வைப்பு முறையை உடையது.
  • முல்லைத் திணையை முதலாகக் கொண்ட கீழ்க்கணக்கு நூல் இது மட்டுமே ஆகும்.
  • “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்’’ என்று இந்நூலின் சிறப்பை பாயிரப்பாடல் உணர்த்துகிறது.

மேற்கோள்

 “வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னானைத் தான்’’

 “சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பிணைமான் இனிது உண்ண வேண்டிக் - கலைமான்தன்
கள்ளத்தின் ஊச்சும் கரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’’

 

    பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்