TNPSC Tamil - அறநூல்கள் - நாலடியார்

TNPSC பொதுத்தமிழ் (General Tamil) -  நாலடியார்

7ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இயல் ஐந்தில் அழியாச் செல்வம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள நாலடியார் பாடல்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை 
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன 
விச்சைமற்று அல்ல பிற.
-சமண முனிவர்
சொல்லும் பொருளும்
வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
கோட்படா -ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும் விச்சை - கல்வி
வவ்வார். கவர முடியாது
எச்சம் - செல்வம்

பாடலின் பொருள்
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

1. ‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
(A) வாய்த்து + ஈயின்
(B) வாய் + தீயின்
(C) வாய்த்து + தீயின்
(D) வாய் + ஈயீன்
See Answer:

2. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
(A) கேடி + இல்லை
(B) கே + இல்லை
(C) கேள்வி + இல்லை
(D) கேடு + இல்லை
See Answer:

3.  எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
(A) எவன் ஒருவன்
(B) எவன்னொருவன்
(C) எவனொருவன்
(D) ஏன்னொருவன்
See Answer:

நாலடியார் 
நூல் வெளி
  • நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். 
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 
  • இது நானூறு வெண்பாக்களால் ஆனது. 
  • இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
  • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. 
  • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
 
சமசீர்கல்வி 6ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகம் இடம்பெற்றுள்ள குறிப்புகள்

சொற்பொருள்:
அணியர் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையார் = போன்றோர்

நாலடியார் நூல் குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நானூறு பாடல்களை கொண்டது.
  • “நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது.
  • சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது.

 

8th Tamil Text Book கலைச்சொற்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்