கார்நாற்பது

  • ஆசிரியர் மதுரைக் கண்ணன் கூத்தனார்
  • 5 ஆம் நூற்றாண்டு
  • 40 வெண்பாக்கள்
  • அகநூல்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை (முல்லை) மட்டும் பாடிய நூல்
  • முல்லைத் திணை ஒழுக்கமாகிய இருத்தல் பற்றிக் கூறுகிறது
  • ஒவ்வொரு பாட­லும் கார்கால வருணனை வருகிறது
  • தலைவன், தலைவி, தோழி, பாங்கன் என்ற நால்வர் மட்டுமே இதனுள் வருகின்றனர்
  • சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
  • பதினெண் கீழக்கணக்கில் உள்ள அக நூல்கள் ஆறனுள் மிகச் சிறியது
  • நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர் இந்நூ­ல் இருந்து சான்று காட்டியுள்ளார்

மேற்கோள்

“செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல் என்ற காடு’’

“தூதோடு வந்த மழை’’

“பாடுவண்டு ஊதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து’’

“கெடாஅப் புகழ்வேட்கை செல்வர் மனம் போல்
படாஅ மகிழ்வண்டு பண்முரலும்’’

“கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி……’’

கருத்துரையிடுக

0 கருத்துகள்