களவழி நாற்பது

  • பொய்கையார் பாடியது.
  • இலக்கிய வரலாற்றில் நான்கு பொய்கையார் உள்ளனர்.
  • சேரமன்னன் கோக்கோதை மார்பனைப் பாடிய சங்ககாலப் பொய்கையார்.
  • பதினெண் கீழ்க்கணக்கில் களவழி நாற்பது, இன்னிலை என்ற நூல்களைப் பாடிய பொய்கையார்
  • நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் முதலாம் திருவந்தாதி பாடிய முதல் ஆழ்வாராகிய பொய்கையாழ்வார்.
  • பன்னிருபாட்டியல் என்ற பாட்டியல் நூலில் சில நூற்பாக்களை இயற்றிய பொய்கையார்.

  • இந்நூலில் நாற்பது (40) பாடல்கள் உள்ளன.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறத்திணை சார்ந்த ஒரே நூல்.
  • இந்நூல் போர்க்களம் பற்றி பாடுகிறது.
  • இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றிய வீரக்கற்பனையில் பாடப்பட்டுள்ளது.
  • கார்த்திகைத் திருவிழா குறித்துக் கூறுகிறது.
  • கலிங்கத்துப் பரணி முதலான பிற்கால நூலுக்கு வழிகட்டியாக அமைகிறது.
  • இந்நூல்முழுவதிலும் ‘களம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
  • இதில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும் அட்டகளத்து (அ) பொருதகளத்து என முடிகிறது.

  • சோழனின் சிறப்புகள் கூறப்படுகின்றன.
  • இந்நூலில் குறிப்பிடப்படும் சோழன் ‘சோழன் செங்கணான்’.
  • இந்நூலில் குறிப்பிடப்படும் சேரன் ‘சேரன் கணைக்கால் இரும்பொறை’.
  • இச்சேரனே, ‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்’(புறநானூறு) என்று பாடியவன்.
  • இச்சேரனே, நீர்க் கேட்டுத் தாமதமாகத் தந்ததால் மானம் கருதி உயிர் விட்டவன்.
  • சோழனால் சிறையில் அடைக்கப்பட்ட சேரனை மீட்கப் பாடப்பட்டநூல்.
  • கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போர்ச் செய்திகளைப் பாடுகிறது.
  • சேரனைச் சிறையில் அடைக்கப்பட்ட இடம் குடவாயில் கோட்டம்.

     பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்