சைமன் குழு (1927)

 இந்திய தேசிய இயக்கம் | சைமன் குழு (1927)

  • 1919 ஆம் ஆண்டு சட்டத்தைப் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படும் என்பது விதி.
  • இக்குழுவின் அறிக்கையை 1935 அரசு சட்டத்திற்கு அடிப்படை ஆகும்.
  • முன்னதாகவே 1927 இல் இச்சட்டத்தை மறு ஆய்வு செய்ய சர்ஜான்சைமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இது "சைமன்குழு” என்ற அழைக்கப்பட்டது.
  • சைமன் குழுவில் இருந்த ஏழு உறுப்பினரும் ஆங்கிலேயர் ஆவர். இதனால் இதற்கு எதிர்ப்புத் தோன்றியது.
  • 1928 பிப்ரவரி 3 இல் இக்குழு பம்பாய் வந்தபோது “சைமனே திரும்பிப் போ” என்ற முழக்கம் அதிர வைத்தது.

  • 1928 அக்டோபர் 30 இல் லாகூரில் நடந்த சைமன்குழு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட லாலாலஜபதிராய் போலீஸ் தடியடியில் காயம் அடைந்து உயிர் துறந்தார்.
  • 1930 மே மாதம் சைமன் குழு அறிக்கை வெளியிட்டது.
  • இந்த அறிக்கை இரட்டையாட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டியது. மாநில சுயாட்சிக்குப் பரிந்துரை செய்தது.

    சைமன் குழு உறுப்பினர்கள்
  • சர் ஜான் சைமன்
  • கிளெமென்ட் அட்லி (பின்நாளில் பிரதமராக உயர்ந்தவர்)
  • ஹாரி லெவி லாசன்
  • எட்வார்ட் காடோகன்
  • வெர்னான் ஹார்ட்ஷாம்
  • ஜார்ஜ் லான் பாக்ஸ்
  • டொனால்ட் ஹோவார்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்