கல்விக்கண் திறந்தவர்

கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்டவர் காமராசர்.

காமராசரின் சிறப்புப் பெயர்கள்
பெருந்தலைவர்                கறுப்புக் காந்தி
படிக்காத மேதை              ஏழைப்பங்காளர்
கர்மவீரர்                               தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்விப்பணிகள்

  • காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
  • மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
  • மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
  • தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.


காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்