மொழி இறுதியாகா எழுத்துகள்:

மொழி இறுதியாகா எழுத்துகள்:
(சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்)

  • சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
  • உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

  • அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
  • சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை
  • ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
  • க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
  • உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

  • கார்த்திக், ஹாங்காங், சுஜித், ஜாங்கிரி, திலீப், மியூனிச் போன்ற பிறமொழிப் பெயர்ச் சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
  • எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
  • ஒகர வரிசையில் ‘நொ’ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
  • ‘நொ’ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.


சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்:
மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்