மொழி முதல், இறுதி எழுத்துகள்

மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.

மொழி முதல் எழுத்துகள் :
(சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்)

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
  • க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
  • ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
    (எ.கா) ஙனம்
    ( ஙனம் என்னும் சொல் இக்காலத்தல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது )
  • ஞ - வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு  எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

  • மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் :
  • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
  • ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
  • டமாரம், ரம்பம், லண்டன், ஃப்ரான்ஸ், டென்மார்க் போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.

மொழி இறுதி எழுத்துகள்:

  • சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
  • ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும்.
    (எ.கா) உரிஞ்

மொழி இறுதியாகா எழுத்துகள்:


6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf

மொழி முதல், இறுதி எழுத்துகள் 

9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar 

தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01

ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்