அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை 

 

சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05.11.2020 முதல் 30.11.2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயர் - அலுவலக உதவியாளர்

2. பணியின்தன்மை - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

3. சம்பளம் - ரூ.15700 - 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

4. வயது - 01.07.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

இனசுழற்சி முறை அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்றுள்ளவாறு)

பொதுப்பிரிவு - 30 வயதுக்குள் 

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BC(M), MBC) - 32 வயதுக்குள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்)  - 32 வயதுக்குள்

முன்னாள் இராணுவத்தினர் - ஆதிதிராவிடர் - 53 வயதுக்குள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்