நோக்கம் :
நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.
குறிக்கோள் : உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.
- பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
- இயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய
- காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்
அமல்படுத்தும் அமைப்பு : கால்நடைகள் அபிவிருத்தி வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அமல்பாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.
நிதியளிப்பு : 100 சதவீதம் மானியம் அடிப்படையிலான நிதியளிப்பு உடையது இத்திட்டம்
இத்திட்டத்தின் கீழுள்ள துவக்கங்கள் :
- ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடைகள் மையங்களை நிறுவுதல் - கோகுல் கிராம்.
- உள்நாட்டு கால்நடைகளை வளர்ப்பவர்களின் சங்கத்தை நிறுவுதல் (கோபாலன் சங்)
- உழவர்களுக்கு “கோபால் ரத்னா” விருதினை வழங்குதல், கால்நடை வளர்ப்பவர்களின் சங்கத்திற்கு “காமதேனு” விருதினை வழங்குதல்.
- சிறந்த மூலவுயிர் திசுக்கள் தொகுதியின் களஞ்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு உதவுதல்.
0 கருத்துகள்