Featured post
ஆரியசமாஜம் | சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரியசமாஜம்
10th Social Science text book notes for TNPSC, TNTET, PGTRB, TN Police Exams
பஞ்சாபில், ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இது 1875இல் நிறுவப்பட்டது. இவ்வமைப்பை நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி (1824-83) ஆவார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூலான சத்யார்த்தபிரகாஷ் பெரும்பாலோரால் படிக்கப்பட்டது.
ஆரிய சமாஜம் இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளை மறுத்தது. அதனுடைய முழக்கம் வேதங்களுக்குத் திரும்புவோம் என்பதாகும்.
ஆரியசமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் முக்கியக் குறிக்கோள் 'எதிர்மத மாற்றம்' என்பதாகும். ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுத்தி (Suddhi) எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.
ஆரியசமாஜம் பல தயானந்தா ஆங்கில-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக