19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள் 

இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும்

இராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

  • இராஜா ராம்மோகன் ராய்  மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்.
  • பெரும் அறிஞரான அவர், தனது தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
  • தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.

  • உபநிடதங்களுக்குத் தான்கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின். மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.
  • சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார்.
  • விதவைப்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் இராஜா ராம்மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.
  • இராஜாராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார். ஆண்கள் பெண்களை கீழானவர்களாக நடத்தும் அன்றைய கால நடைமுறையை எதிர்த்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்படவேண்டும் எனும் கருத்தை வலுவாக முன்வைத்தார்.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக்கல்வியும் மேலை நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தார்.
  • இராஜா ராம்மோகன் ராய் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார். 
  • பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது.
  •  

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்