ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
10th Social Science New Book

  • வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார். 
  • இராஜாராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார்.
  • விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்.

  • அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். 
  • ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார். பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றிய அவர் பெண்களுக்கானபள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார். 
  • இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார். 
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • இச்சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்கவேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

  • 1860இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும்.
  • திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

    தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

    இராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

    தேவேந்திரநாத் தாகூர்

    இராமகிருஷ்ண பரமஹம்சர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்