19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்


- மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832-1907) ஆகியோரால் பிரம்மஞானசபை 1875 இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
- இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.
- பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
- இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது.
- இந்து மறைநூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.
அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு- ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் (1847-1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது.
- இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
- அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா (New India), காமன்வீ ல் (Commonweal) எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.
இராமகிருஷ்ண இயக்கம்
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் (1817-1905)
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
சுவாமி விவேகானந்தர்
ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886)
இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும்
0 கருத்துகள்