19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
சாதி எதிர்ப்பு இயக்கங்கள் | ஜோதிபா பூலே
ஜோதிபா பூலே
- ஜோதிபா கோவிந்தராவ் பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார்.
- அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
- சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
- குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
- விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
- ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும்
- விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
- அவர் எழுதிய நூலான குலாம்கிரி (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக்கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.
Click & Download
0 கருத்துகள்