ஸ்ரீரங்கம்கோவிலில் அர்ச்சகர் பயிற்சி

ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி
விண்ணப்பிக்க அவகாசம்


சென்னை, ஜன. 1 2022
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன., 24 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்ச ராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், விண்ணப்ப படிவங்களை, www.srirangam.org என்ற கோவில் இணையதளம்; www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் காலம், 2022 ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அற நிலையத்துறை அறிவித்து உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்