ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறுகாப்பியங்கள்


காப்பிய இலக்கியத் தகவல்கள்

  • பொருட் தொடர்நிலைச் செய்யுள் காப்பியம் எனப்படும்.
  • காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்.
  • காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.


ஐம்பெருங்காப்பியங்கள்

  • ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர் (நன்னூல் 387 உரை).
  • ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலாகக் குறிப்பிட்டவர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா).

  1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
  3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
  4. வளையாபதி - பெயர் தெரியவில்லை
  5. குண்டலகேசி - நாதகுத்தனார்

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
  • சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்.
  • மணிமேகலை, குண்டலகேசி என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்.


ஐஞ்சிறுகாப்பியங்கள்

  1. நாக குமார காவியம் - ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
  2. உதயண குமார காவியம் - ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
  3. யசோதர காவியம் - ஆசிரியர் தெரியவில்லை
  4. நீலகேசி - ஆசிரியர் தெரியவில்லை
  5. சூளாமணி - தோலா மொழித்தேவர்

  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.
  • ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.
  • சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் கந்தியார்.
  • கந்தியைக் கவுந்தி என்றும் கூறுவர்.
  • குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்ட  நூல் நீலகேசி.

Click & Download Pdf

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf

மொழி முதல், இறுதி எழுத்துகள் 

9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar 

தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01

ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்



கருத்துரையிடுக

0 கருத்துகள்