சமச்சீர்க்கல்வி தமிழ்ப்பாடத்திலிருந்து தொகுக்கப்பட்ட
TNPSC, TET, PGTRB, UGTRB, TN Police Exams
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

முற்றியலுகரம்
தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம் எனப்படும்.
முற்றியலுகரம் வரும் இடங்கள்:
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு, சு, டு, து, பு, று)
(எ.கா) பகு, பசு, படு, அது, தபு, பெறு
காணு, உண்ணு, உருமு - இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
எழு, தள்ளு, கதவு - இவற்றின் ஈற்றிலுள்ள இடையின் உகரங்கள் (ழு, ளு, வு) முற்றியலுகரங்கள்.
இவ்வாறு தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
0 கருத்துகள்