தமிழ் இலக்கணம் குற்றியலிகரம்

 சமச்சீர்க்கல்வி தமிழ்ப்பாடத்திலிருந்து தொகுக்கப்பட்ட
TNPSC, TET, PGTRB, UGTRB, TN Police Exams
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

குற்றியலிகரம்

  • குற்றியலிகரம் = குறுமை+இயல்+இகரம் எனப் பிரிக்கலாம். 
  • குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.
  • இயல் என்றால் ஓசை என்பது பொருள்.
  • இகரம் என்றால் 'இ' என்னும் எழுத்து.
  • இகரம் தன் ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் ஆகும்.
  • நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இகரமாகத் திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
(எ.கா)        
நாகு + யாது = நாகியாது 
வீடு + யாது வீடியாது
வண்டு + யாது = வண்டியாது
வரகு + யாது = வரகியாது
என்பது+யாது = என்பதியாது

'மியா'என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரம் (மி=ம்+இ) தன் மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும். இதுவும் குற்றியலிகரம் எனப்படும். 
(எ.கா)   கேண்மியா, சென்மியா
          

முற்றியலுகரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்