நந்திக் கலம்பகம் | 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி

 

நந்திக் கலம்பகம்
நந்திமன்னன் வீரம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு 
      பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 
      காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும் 
      இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்   
      வானகம் ஆள்வாரே

சொற்பொருள்:

புயல் – மேகம்
பணை – மூங்கில்
பகரா – கொடுத்து
பொருது – மோதி
நிதி – செல்வம்
புனல் – நீர்
கவிகை – குடை
வானகம் - தேவருலகம்
இலக்கணக்குறிப்பு:
பொழிதருமணி – வினையெச்சம்
வருபுனல் – வினையெச்சம்
நிதிதருகவிகை – வினையெச்சம்
இவை இவை - அடுக்குத்தொடர்

நூல் குறிப்பு:
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
  • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
  • கலம்பகம் பதினெட்டு உறுபுகளை கொண்டது.
    புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்