- காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று.
- உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.
- காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.
- தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம்.
- முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
- அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
சொல்லும் பொருளும்
புயம் - தோள்;
வரை – மலை;
வன்னம் – அழகு;
கழுகாசலம் கழுகு மலை;
துஜஸ் தம்பம் - கொடி மரம்;
சலராசி - கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்;
விலாசம் - அழகு;
நூபுரம் - சிலம்பு;
மாசுணம் – பாம்பு;
இஞ்சி - மதில்;
புயல் - மேகம்;
கறங்கும் - சுழலும்.
இலக்கணக்குறிப்பு
தாவி - வினையெச்சம்,
மாதே - விளி
பகுபத உறுப்பிலக்கணம்
வருகின்ற - வா(வரு) + கின்று + அ
வா - பகுதி, வரு எனத் திரிந்தது விகாரம்
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
புணர்ச்சி விதி
திருப்புகழ் - திரு + புகழ்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். திருப்புகழ்
உயர்ந்தோங்கும் - உயர்ந்து + ஓங்கும்
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் உயர்ந்த் + ஓங்கும்.
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே உயர்ந்தோங்கும்.
- 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும். இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.
- தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்;
- 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
- இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
0 கருத்துகள்