குயில் பாட்டு | 11th Tamil

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு

  • உலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் செவ்வியல் இசைமட்டுமன்று, ஏட்டில் எழுதப்படாமலும் கருவிகளால் இசைக்கப்படாமலும் காற்று முழுவதும் கலந்திருப்பதும் இசைதான்.
  • குயில்பாட்டு என்ற பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.
  • பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்.
  • பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
  • அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.
  • தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
  • இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச் செய்தவர்.
  • சுதேசமித்திரன் இதழாசிரியராகச் சில நாள் விளங்கியவர்.
  • பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடைநூல்களையும் எழுதியவர்.
  • இவருடைய வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தக்கவை.
  • தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி பாரதியோடு தொடங்குகிறது எனலாம்.
  • முன்னைப் பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமை வாய்ந்ததாய தமிழ் மொழியைத் திறன்மிக்கதாய் ஆக்கும் அறிஞர் பெருமக்களுள் பாரதிக்கு ஓர் தனி இடம் உண்டு.
  • பாரதியாரின் பாங்சாலிசபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்னும் முப்பெரும் பாடல்களுள் ஒன்றான குயில்பாட்டின் ஒரு சிறு பகுதி நமது பாடப்பகுதியாக இடம் பெறுகிறது.
  • சொற்பொருள்
    • வாரி = கடல்
    • கோற்றொடியார் = பெண்கள் (உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
    • குக்குவென = நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
    • பண்ணை = வயல்வெளி
    • வேய் = மூங்கில்
    • வேயின்குழல் = புல்லாங்குழல்
    • பண்கள் = இசைப்பாட்டு
    இலக்கணக்குறிப்பு
    • கானப்பறவை = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    • வளைக்கரங்கள் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
    • கலகலென, குக்குவென = இரட்டைக்கிளவி
    • நீரோசை = ஆறாம் வேற்றுமைத் தொகை
    • பெருங்கடல் = பண்புத்தொகை
    • பழகு, பாட்டு = வினைத்தொகை
    • பாவியேன் = தன்மை ஒருமை வினைமுற்று

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்