பாஞ்சாலி சபதம்

ஆசிரியர் குறிப்பு:
  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் :  சின்னசாமி - இலக்குமி அம்மையார்
  • துணைவி : செல்லம்மாள்
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.
நூல் குறிப்பு:
  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  •  பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
சிறப்பு:
  • பாரதியார் "பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி"  எனப் புகழப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.
சொற்பொருள்:
எம்பி - என் தம்பி
களிக்க - மகிழ
மடப்பிடி - பாஞ்சாலி
கோமான் - அரசன்(திருதராட்டிரன்)
நுந்தை - நும் தந்தை
அடவி - காடு
தடந்தோள் - வலியதோள்
மருங்கு - பக்கம்
குலவு - விளங்கும்
பண்ணவர் - தேவர்
அரம்பையர் - தேவமகிளிர்
வீறு - வலிமை
கோலமுறு - அழகு மிக்க
செறிந்த - அடர்ந்து
கா - காடு
குலவு - விளங்கும்
ஞாலம் - உலகம்
ஞானம் - அறிவு
புன்மை - இழிந்த தன்மை
சதுரங்கச் சேனை - நால்வகைப் படைகள்
இலக்கணக்குறிப்பு:
அழைத்தனன் - முற்றெச்சம்
மாநகர் - உரிச்சொற்றொடர்
சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
அடவி மலையாறு - உம்மைத்தொகை
கடந்து - வினையெச்சம்
தடந்தோள் - உரிச்சொற்றொடர்
செறிந்து, பாய்ந்து - வினையெச்சம்
பாலாடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
நீளமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகை
காத்தல் - தொழிற்பெயர்
தொல்லுலகு - பண்புத்தொகை
தாளமும் வேளமும் - எண்ணும்மை
பதமலர் - உருவகம்
பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள்
ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்.
காத்தல் - தொழிற்பெயர்
தாளமும் மேளமும் - எண்ணும்மை

TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்