மனோன்மணீயம் | 11th Tamil Text Book-2

TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்

மனோன்மணீயம்


மனோன்மணீயம்  | 11th Tamil Text Book

மனோன்மணீயம் நூல்குறிப்பு :
  • மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல். லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். 
  • இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. 
  • இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது. 
  • நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. 
  • மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை ‘சிவகாமியின் சரிதம்'
ஆசிரியர் குறிப்பு:
  • பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855இல் பிறந்தார்.
  • திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். 
  • சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. 
  • இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.
தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில
1. அகத்தியம் 
2. குணநூல் 
3. கூத்தநூல் 
4. சந்தம் 
5. சயந்தம் 
6. செயன்முறை
7. செயிற்றியம்
8. முறுவல்
9. மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்
10. நாடகவியல்
பகுபத உறுப்பிலக்கணம்:

முளைத்த – முளை + த் + த் + அ
முளை – பகுதி, 
த் – சந்தி, 
த் – இறந்தகால இடைநிலை, 
அ – பெயரெச்ச விகுதி.

ஏகுமின் – ஏகு + மின்
ஏகு – பகுதி, 
மின் – ஏவல் வினைமுற்று விகுதி.

விடுத்தனை – விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி, 
த் – சந்தி, 
த் – இறந்த கால இடை நிலை, 
அன் – சாரியை, 
ஐ – முன்னிலை ஒருமை வினை முற்று விகுதி.

சென்ற – செல்(ன்) + ற் + அ
செல் – பகுதி, (‘ல்’ ‘ன்’ ஆனது விகாரம்), 
ற் – இறந்தகால இடைநிலை, 
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதி:

காலத்தச்சன் – காலம் + தச்சன்
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் – கால + தச்சன்
வல்லினம் மிக்குப் புணரும் - காலத்தச்சன்

உழுதுழுது – உழுது + உழுது
உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்
உழுத் + உழுது
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உழுதுழுது.

பேரழகு – பெருமை + அழகு
ஈறு போதல் - பெரு + அழகு
ஆதி நீடல் – பேரு + அழகு
இனையவும் – பேர் + அழகு (உகரம் கெட்டது)
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - பேரழகு

கருத்துரையிடுக

0 கருத்துகள்