முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் : 
காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி.
பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.
சொற்பொருள்:
புலராமே – வறண்டு விடாமல் கம்முதல் – குரல் தேய்ந்து மங்குதல்
விரல் – பெருவிரல் சிவவாமே – சிவக்காமல்
அஞ்சனம் – கண்மை கலுழ்தல் – அழுதல்
தாள் – கால் வயித்தியநாதபுரி – புள்ளிருக்குவேளூர்

இலக்கணக்குறிப்பு:
மெல்லிதழ் – பண்புத்தொகை மென்குரல் – பண்புத்தொகை
நுண்டுளி – பண்புத்தொகை
கண்மலர் – உருவகம்
பொழி திருமுகம் – வினைத்தொகை
ஆடுக – வியங்கோள் வினைமுற்று

கருத்துரையிடுக

0 கருத்துகள்