TNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்

இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு,

** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர்.

** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவதால் மட்டுமே பணி வாய்ப்பினைப் பெற இயலாது.
** அந்த அந்த துறை ஆசிரியர்களுக்கு என காலியிடங்களை பொறுத்து தனியாக போட்டித் தேர்வு (COMPETITIVE EXAM) நடைபெறும்.

** போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி பணி வாய்ப்பினைப் பெற முடியும்.

** போட்டித் தேர்வினை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றால் மட்டுமே எழுத முடியும்.

** வெறும் B.Ed, DTed. படித்தவர்கள், நேரடியாக போட்டித் தேர்வினை எழுத இயலாது.

** வெயிட்டேஜ் க்கு எல்லாம் இனி வேலை இல்லை.

ஆந்திராவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையினை இனி தமிழகமும் பின் பற்றுகிறது.
ஆந்திராவில் பின்பற்றப்பட்டு வரும் முறை:

ஆந்திராவில், தற்போது ஒரு ஆசிரியர் எந்த பாடத்தில் (MAJOR SUBJECT) பட்டம் பெற்று இருக்கிறாரோ அதில் இருந்தே போட்டித் தேர்வில் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது, உதாரணமாக அறிவியல், கணக்கு, வரலாறு எடுத்து படித்து இருப்போர்க்கு அந்த பாடத்தில் கேள்விகள் அதிகமாக இடம் பெறுகிறது.

அதே போன்று தமிழகத்திலும் முக்கிய பாடத்தினைப் (MAJOR) பொறுத்து தனித்த தனியாக கேள்விகள் அமையலாம்.

போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் மூலம் மட்டுமே வெற்றி உறுதி செய்யப் படுகிறது. முந்தைய கல்வித் தகுதிகள் கணக்கில் கொள்ளப் படுவதில்லை.

தொகுப்பு
அஜி
சென்னை.
Current Affairs pdf free download 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]

கருத்துரையிடுக

0 கருத்துகள்