திருக்குற்றாலக் குறவஞ்சி

சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக் குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா - தொடர்பான செய்திகள்

11th Tamil திருக்குற்றாலக்குறவஞ்சி

  • தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி. 
  • இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்று போற்றப்பட்டது. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. 
  • திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
  • குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். 
  • 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். 
  • குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார். 
  • குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. 
  • பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
  • இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது. 
  • பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.
சொல்லும் பொருளும்
கொத்து - பூமாலை
குழல் - கூந்தல்
கோலத்து நாட்டார் - கலிங்க நாட்டார்
வரிசை - சன்மானம் 
நாங்கூழ் - மண்புழு
இலக்கணக்குறிப்பு
மாண்ட தவளை – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்
பெற்ற – பெறு(பெற்று)+அ
பெறு – பகுதி 
பெற்று – ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது 
அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதி
பயமில்லை - பயம் + இல்லை
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - பயமில்லை 

திருக்குற்றாலக் குறவஞ்சி - 6 ஆம் வகுப்பு சமச்சீர்க்கல்வி

கருத்துரையிடுக

0 கருத்துகள்