உலகின் தலை சிறந்த ஆசிரியர்

வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த ஆசிரியராக ஒருவரை தேர்வு செய்து 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாக வழங்கி ஆசிரியர் சமூகத்தை இவர் கவுரவித்து வருகிறார்.
உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருதையும், அதற்கான பரிசுத் தொகையான ரூ. 65 கோடி பிரிட்டனை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வென்றுள்ளார். லண்டனின் பிரண்ட் பகுதியில் உள்ள ஆல்பர்ட்டன் பள்ளியில் கலை மற்றும் ஜவுளி பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றுபவர் ஆண்டிரியா ஸஃபிரக்கோவ் படிப்பறிவு மிகவும் குன்றிய வன்முறை நிறைந்த பகுதியில் பணியாற்றிய இவர் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தினார்.

பெற்றோர் மாணவர்களிடையே பேசுவதற்காக 130 மொழிகளை மேலோட்டமாக கற்றுக்கொண்டார். இவர்க்கு உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருது துபாயில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. 5 ஆண்டுகள் இவர் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றும் பட்சத்தில் பரிசுத் தொகை தவணை முறையில் இவருக்கு வழங்கப்படும். 
Current Affairs 2018 Pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்