டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்

 • பழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களை மான்புடை மன்னர்கள் எவ்வாறு மதிக்கப் பெற்றார்கள்?
  புலவர்களாகவும், பாடினியாகவும், விறலியாகவும் மதிக்கப்பெற்றனர்.
 • நாட்டு விடுதலைக்கு போராடிய பெரியார், வேறு எதற்கு போராடினார்?
  பெண்களின் சமூக விடுதலைக்கு
 • பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
  தொண்டு செய்து பழுத்த பழம்
  தூயதாடி மார்பில் விழும்
  மண்டைச் சுரப்பை உலகு தொழும்
  மணக்குகையில் சிறுத்தை எழும்
 • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகை? அவை யாவை?
  இரண்டு, அவை:-
  1) அடிப்படைத் தேவைகள்,
  2) அகற்றாப்படவேண்டியவை
 • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அடிப்படை தேவைகள்” எவை?
  1) பெண்கல்வி
  2) பெண்ணுரிமை
  3) சொத்துரிமை
  4) அரசுப்பணி
 • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அகற்றப்பட வேண்டியவை” எவை?
  1) குழந்தைத் திருமணம்
  2) மணக்கொடை
  3) கைம்மை வாழ்வு
 • நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது – என்று கூறியவர்?
  தந்தை பெரியார்
 • பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேறவேண்டும் – என்று கூறியவர்?
  தந்தை பெரியார்
 • பெண்கள் கல்வி பெறுவது சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது – என்று கூறியவர்?
  தந்தை பெரியார்
 • பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது – என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
  தந்தை பெரியார்
 • பெண்களுக்கு எந்தெந்த படிப்புகளை தாராளமாக கொடுக்கவேண்டும் என்று பெரியார் கூறுகிறார்?
  உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும்
 • “நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு” – எது என்று பெரியார் கூறுகிறார்?
  பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
 • எந்த இழிநிலை ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்?
  பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
 • பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்?
  தந்தை பெரியார்
 • ஆணுக்குப் பெண் இளைப்பில்லை – என்று சிந்தித்தவர்?
  தந்தை பெரியார்
 • பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதச் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுரித்தியவர்?
  தந்தை பெரியார்
 • பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தவர்?
  தந்தை பெரியார்
 • பெண்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது எதுவென்று பெரியார் கூறுகிறர்?
  சொத்துரிமை மறுக்கப்பட்டமையே
 • பெண்கள் எதற்காக போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டும் என பெரியார் கூறுகிறார்?
  சொத்துரிமை மறுக்கப்பட்டதற்கு
 • பெரியாரின் சிந்தனைகளில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது எது?
  பெண்களுக்கான சொத்துரிமை
 • பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர்?
  தந்தை பெரியார்
 • விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று?
  குழந்தை மணம்
 • சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என பெரியார் குறிப்பிடுவது எதனை?
  குழந்தைத் திருமணம்
 • குழந்தைத் திருமணத்தை நீக்கப் பாடுபட்டவர்?
  தந்தை பெரியார்
 • தமிழர்களிடையே இன்று பரவியுள்ள பெருநோய்?
  மணக்கொடை (வரதட்சனை)
 • தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாய் இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும் – என்று கூறியவர்?
  தந்தை பெரியார்
 • தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் – என்று நாப்பறை ஆர்த்தவர்?
  தந்தை பெரியார்
 • தந்தை பெரியார் கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை – என்று தெரிவித்தவர்?
  தந்தை பெரியார்
 • ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்?
  தந்தை பெரியார்
 • ஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது – என்பது யாருடைய கருத்து?
  தந்தை பெரியார்
 • சமூக முரண்களை எதிர்த்தவர்?
  தந்தை பெரியார்
 • பெண்களே சமுகத்தின் கண்கள் – என்று கருதியவர்?
  தந்தை பெரியார்
 • பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர்?
  தந்தை பெரியார்
 • யாருடைய வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது?தந்தை பெரியார்

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection