9th New Tamil Book Study Material Pdf Download


நீரின்றி அமையாது உலகு


  • வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து
  • “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் இளங்கோவடிகள்.
  • உலகச் சுற்றுச்சூழல் நாள் : ஜøன் 5
  • நீர் இன்று அமையாது உலகம் - திருவள்ளுவர்.
  • மழை உழவுக்கு உதவுகிறது; விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது; நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்று கூறியவர் மாங்குடி மருதனார்
  • ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகும்.
  • பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர். கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.
  • கரிகாலச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட அணை கல்லணை
  • கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 40 முதல் 60 அடி. உயரம் 15 முதல் 18 அடி.
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்
  • அகழி - கோட்டையின் புறத்தே அமைக்கப்பட்ட நீர் அரண்
  • அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது
  • ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
  • ஆறு - பெருகி ஓடும் நதி
  • இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
  • உறைகிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு. 
  • ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
  • ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது
  • ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
read more...


9th Tamil New Text Book (Term-1) 2018
(132 Pages-Tamil Only-Without English)
Download other New Text Books



கருத்துரையிடுக

0 கருத்துகள்