புலிட்சர் விருதுகள் 2018

இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிப்பு

இலக்கியம், ஊடகம், இணைய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தால் ஆண்டு தோறும் ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்தாண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்டூ சீன் கீர் என்பவர் எழுதிய லெஸ் என்ற புத்தகம் பிக்சன் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது.

இதேபோல தி கல்ப் - மேக்கிங் ஆப் அன் அமெரிக்கன் சீ  என்ற புத்தகம் வரலாற்று பிரிவிலும், கரோலின் ப்ராசெர் எழுதிய ப்ராய்ரி பயர் - தி அமெரிக்கன் ட்ரீம்ஸ் ஆப் லாவ்ரா என்ற புத்தகம் வாழ்க்கை வரலாறு பிரிவிலும் விருதுகளை வென்றுள்ளது.

இதேபோல, கவிதை பிரிவில் ப்ராங் பிதார்ட் எழுதிய ஹால்ப் லைட் என்ற புத்தகமும் விருதை வென்றுள்ளது.

ஊடகத்துறையில் பொது சேவை பிரிவில் தி நியூயார்க் டைம்ஸ், பிரேக்கிங் மற்றும் செய்தி செய்தி வெளியீடு ஆகியவற்றில் தி பிரஸ் டெமாக்ரேட் நாளிதழ்கள் விருதுகளை பெற்றுள்ளன.

புலனாய்வு செய்தி சேகரிப்பு பிரிவில் தி வாஷிங்டன் போஸ்டும், சர்வதேச செய்திசேகரிப்பில் தி வாஷிங்டன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் விருதுகளை வென்றுள்ளன.

இசையமைப்பு பிரிவில்  ‘டாம்’ என்ற ஆல்பத்திற்காக கென்டிரிக் லேமர் புலிட்சர் விருதை வென்றுள்ளார்.

இவ்வாறு மொத்தம் இருபது பிரிவுகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் வென்றவர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்